பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள் |
குலை நோய்: பைரிகுலரியா கிரைசியா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- நாற்று நட்டதிலிருந்து இருந்து வளர்ந்து, தானியங்கள் உருவாகும் வரை எந்த நிலையிலும் இதன் தொற்று ஏற்ப்படுகிறது.
- விதை முளைக்கும் இரண்டாம் வாரத்திலேயே நாற்றங்காலில் தொற்று தோன்றும் மற்றும் அத்துடன் முழு நாற்றங்காலிலும் வேகமாக பரவுகிறது.
- சிறிய பழுப்பு நிற வட்ட புள்ளிகள் தோன்றும் பின் பெரிய நீள் சுழல் வடிவ பகுதிகள் நாற்றங்காளில் உருவாகும் இறுதியில் நாற்றின் முழுவதும் உருவாகிறது. நாற்றங்காலில் இளம் இலைகள் முற்றிலும் காய்ந்துவிடும்.
- சுழல் வடிவ புள்ளிகள் வயலில் இலைகளில் தோன்றும். பல புள்ளிகள் இணைந்தும் மற்றும் இலைகள் காய்ந்துவிடும்.
குலை நோயின் மூலமாகவே கதிர்காம்பில் அதிக சேதம் ஏற்படுகிறது. கதிர்ப் பகுதியில் சுருங்கி கருப்பு நிறமாக மாறுகிறது.
- நோய்த்தொற்றானது கதிர்ப்பகுதி, அடித்தள கிளைப்பகுதி, தண்டு பகுதிகளில் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பழுப்பு மற்றும் பதராக மாறிவிடுகிறது, தானியங்கள் சில சுருங்கியும் உருவாகின்றன.
- இதன் மூலமாக கேழ்வரகின் உச்சிப்பகுதி பாதிக்கப்படுகிறது. வரகு பகுதி பதராகவும் மற்றும் தானியங்கள் சில சுருங்கியும் உருவாகின்றன.
|
|
|
|
|
|
|
|
தாக்கப்பட்ட பயிர் |
|
இலைகளில் குலை நோய் |
|
கதிர் குலை நோய் |
|
நோய்க்காரணி:
- பூசண இழையானது இடைப்பாடா மற்றும் இடையேயான செல்லுலாரால் ஆனது.
- எண்ணற்ற கொநிடியோஸ்போரஸ் மற்றும் பூசண இழையானது ஈரப்பதமான நிலைமைகள் கீழ் சுழல் வடிவ புள்ளிகளை மத்திய பகுதியில் உற்பத்தி செய்கின்றன . இதன் விளைவாக, ஸ்பாட் புகை தோற்றத்தை கருதுகிறது
- கொநிடியோஸ்போரஸ் இலைத்துளைகள் மூலம் அல்லது மேல் தோல் செல்களின் தடுப்பு சுவரில் மூலமும் கருமை நிறமாக வெளிப்படுகிறது. கொநிடியாக்களானது
- கொநிடியோஸ்போரஸ்களின் முனையில் இருக்கும்.
- கொநிடியாக்கள் பேரிக்காய் வடிவிலும் , 3 செல்கள், நிறமற்றது, 2 தடுப்பு சுவர்கள் இருக்கிறது.
- கோனிடியாக்கள் இலை மேல் தோல் செல்கள் அல்லது இலைத்துளைகளில் பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
|
|
|
|
|
|
|
பைரிகுலரியா கிரைசியா |
|
பைரிகுலரியா கிரைசியா கொநிடியா |
|
|
கட்டுப்படுத்தும் முறை: |
|
பைரிகுலரியா கிரைசியா வாழ்க்கை சுழற்சி முறை: |
|
உழவியல் முறை
- நோயற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
- எதிர்ப்பு வகை பயிர்களான கோ. ஆர்.ஏ. போன்ற (14) , பையூர் (ரலி) -2, ஜி.பி.யு -28, ஜி.பீ.-45, ஜி.பீ. 48, எல் 5 போன்றவைகளை வளர்க்கலாம்.
- முறையான பயிர் இடைவெளி மற்றும் முறையான நடவு அறிவுறுத்தப்படுகிறது
- ஆரம்ப விதைப்பு (ஜூலை மாதம்) குலை நோய் தீவிரத்தை குறைக்கிறது
உயிரியல் முறை
- சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் (Pf1) 2 கிராம்/ லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அறிகுறி வந்தபிறகு உடனடியாக முதல்தெளிப்பை தெளிக்கவேண்டும். இரண்டாம் மற்றும் மூன்றாம் தெளிப்பை 15 நாட்கள் இடைவெளியில் பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்.
- சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கொண்டு 6 ஜி / கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்யவேண்டும். கருவேல் மர இலை சாறு (10%), ஐப்போமியா கார்னியா இலை சாற்றை (10%) தெளிக்கவேண்டும்.
- பூசண கலவையான (கார்பன்டசிம் + மேன்கோசெப்) @ 0.2% செறிவு குண்டதை இலைவழி தெளிக்கவேண்டும். இதனை தொடர்ந்து இரண்டாவது தெளிப்பானது சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (Pf1) 50% 2 கி/லிட்டர்கலந்து 10 நாட்கள் கழித்து தெளிக்கவேண்டும்.
|
|
வேதியியல் முறை
- கார்பென்டாசிம் 1 கிராம் / கிலோ உடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- விதைப்பிற்கு 10-12 நாட்கள் பிறகு நாற்றங்காலில் கார்பன்டாசிம் 0.1% தெளிக்க வேண்டும் . திரும்பவும் 20-25 நாட்கள் கழித்தும், நட்டு 40 முதல் 45 நாட்களுக்கு பிறகும் தெளிக்கவேண்டும்.
- பூசண கலவையான கார்பென்டாசிம் 500 கிராம் அல்லது இப்ரோபெண்டோஸ் (Ibp)500 மிலி / எக்டர் அல்லது பூசண கலவையான(கார்பன்டசிம் + மேன்கோசெப்) @ 500 கிராம் / எக்டர் தெளிக்க வேண்டும் .முதல் தெளிப்பை அறிகுறிகள் பார்த்து பிறகு உடனடியாக தெளிக்கவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தெளிப்பானது 15 நாட்கள் இடைவெளியில் பூக்கும் பருவத்தில் தெளித்து கதிர் மற்றும் வரகு பகுதியில் தொற்றை கட்டுப்படுத்தலாம்.
|
Source of lifecyle: http://www.ibwf.de/funagro_index.htm
Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003
Thanks to Dr.M.N.Budhar, Professor and Head, Regional Research Station, Paiyur- 65112 |
|
|